உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  சாலை பாதுகாப்பு: பைக் ஊர்வலம்

 சாலை பாதுகாப்பு: பைக் ஊர்வலம்

புதுச்சேரி: தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி, புதுச்சேரி காவல்துறை சார்பில் இருசக்கர வாகன ஊர்வலம் கடற்கரை சாலை காந்தி சிலை அருகில் தொடங்கியது. ஊர்வலத்தை கவர்னர் கைலாஷ்நாதன் கொடியசைத்து துவக்கி வைத்து, பேசுகையில், 'சாலை பாதுகாப்பு என்பது அரசின் பொறுப்பு மட்டுமல்ல. சமுதாயத்திற்கும் மிகப்பெரிய பொறுப்பு உள்ளது. சாலை விதிகளை அனைவரும் மதிக்க வேண்டும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்' என்றார். நிகழ்ச்சியில், சபாநாயகர் செல்வம், டி.ஜி.பி., ஷாலினி சிங் மற்றும் போலீஸ் உயரதிகரிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து சாலை பாதுகாப்பு கையேடு வெளியி டப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி