சாலை பாதுகாப்பு மாதம் நிறைவு விழா
புதுச்சேரி: புதுச்சேரி அரசு போக்குவரத்து துறை சார்பில், 36வது தேசிய சாலைப் பாதுகாப்பு மாத நிறைவு விழா இன்று காலை கம்பன் கலையரங்கில் நடக்கிறது. கவர்னர் கைலாஷ்நாதன், உயர்நிலைப் பள்ளி அளவிலான சாலைப் பாதுகாப்பு அனிமேஷன் வீடியோவையும், முதல்வர் ரங்கசாமி ஆரம்ப பள்ளி அளவிலான சாலை பாதுகாப்பு அனிமேஷன் வீடியோவையும் கல்வித்துறையிடம் ஒப்படைக்கின்றனர். சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், தலைமை செயலர் சரத் சவுகான் உட்பட பலர் பங்கேற்கின்றனர்.