உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  சாலை பாதுகாப்பு உறுதிமொழி ஏற்பு

 சாலை பாதுகாப்பு உறுதிமொழி ஏற்பு

புதுச்சேரி: தேசிய சாலைப் பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு, கவர்னர் முன்னிலையில் அதிகாரிகள் உறுதிமொழி ஏற்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் தேசிய சாலைப் பாதுகாப்பு மாதமாக கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி, லோக் நிவாஸில் நேற்று கவர்னர் கைலாஷ்நாதன் முன்னிலையில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தேசிய சாலைப் பாதுகாப்பு உறுதிமொழி ஏற்றனர். இதேபோல், தலைமைச் செயலகத்தில் அரசுச் செயலர் ஸ்மிதா உறுதிமொழியை வாசிக்க தலைமைச் செயலக ஊழியர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டனர். 'நாட்டின் நல்ல குடிமகன், குடிமகள் என்ற வகையில், சாலையில் பாதுகாப்பாகவும், ஒழுங்காகவும் பயணிப்போம். வழிமுறைகளை நாம் பின்பற்ற உறுதி கூறுவோம். மது போதையிலோ அல்லது மொபைல் போன் உபயோகித்துக் கொண்டு வாகனங்களை இயக்க மாட்டோம். விபத்தில் சிக்கியவர்களுக்கு முதலுதவி மற்றும் அவசரகால சிகிச்சைக்கு உதவிடுவோம்' என உறுதி ஏற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை