தவளக்குப்பத்தில் சாலை பணி துவக்கம்
அரியாங்குப்பம்: தவளக்குப்பத்தில் 44.73 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சாலை பணியை ராமு எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். மணவெளி தொகுதிக்குட்பட்ட தவளக்குப்பம் அண்ணா நகர் சாலை மிகவும் குண்டும், குழியுமாக உள்ளது. இது குறித்து, பொதுமக்கள் எம்.எல்.ஏ.,விடம் கோரிக்கை வைத்தனர். அதையடுத்து, பொதுப்பணித்துறை மூலம் 44.73 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. சாலை அமைப்பதற்கான பணியை ராமு எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், பொதுப்பணித்துறை அதிகாரிகள், ஊர் முக்கியஸ்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.