உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பல கிலோ மீட்டர் துாரத்திற்கு சாலைகள் கந்தல் மெகா பள்ளங்களால் விபத்து அபாயம்

பல கிலோ மீட்டர் துாரத்திற்கு சாலைகள் கந்தல் மெகா பள்ளங்களால் விபத்து அபாயம்

புதுச்சேரி: புயல்,கனமழையால் பல கிலோ மீட்டர் தொலைவிற்கு கந்தலாகி உள்ள சாலைகளை போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணியை துவங்க வேண்டும். புதுச்சேரியில் பெஞ்சல் புயல் காரணமாக சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. அனைத்து சாலைகளிலும் வெள்ளக்காடாக காட்சியளித்தது. புயல், வெள்ளம் ஓய்ந்து இயல்பு நிலை திரும்பு உள்ள போதிலும் சாலைகள் அனைத்தும் கந்தலாகி கிடக்கின்றது. சாலைகள் அரித்து மெகா சைஸ் பள்ளங்கள் உருவாகியுள்ளன.ஜல்லிகள் பல கி.மீ., தொலைவிற்கு பெயர்ந்து கிடக்கின்றன. புழுதி பறக்கின்றன. இவை வாகன ஓட்டிகளை தடுமாற வைக்கின்றன.பெரும்பாலான பள்ளங்கள் மரண பள்ளங்களாக உருவெடுத்துள்ளன. வாகன ஓட்டிகள் சிறிது கவனம் சிதறினாலும் உயிரை பறித்து விடும். முக்கிய சாலைகள் தெரு விளக்கு எரியாமல் இருண்டு காணப்படுகின்றன. இரவு நேரங்களில் இந்த பள்ளங்கள் வாகன ஓட்டிகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது,வாகனங்கள் ஓட்ட முடியாத அளவிற்கு சாலைகள் பெரும் குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றன. புயல், மழையால் கந்தலாகி உள்ள அனைத்து சாலைகளையும் போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணியை பொதுப்பணித் துறை துவங்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ