உள்ளூர் செய்திகள்

பாறை ஓவிய முகாம்

அரியாங்குப்பம்: பாரதியார் பல்கலைக்கூடத்தில், இரண்டாம் நாள் முகாமில், மாணவர்கள் வரைந்த பாறை ஓவியங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.இந்திராகாந்தி தேசிய கலை மையம் மற்றும் அரியாங்குப்பம் பாரதியார் பல்கலைக்கூடம் இணைந்து, பாறை ஓவியங்கள் வரையும் இரண்டு நாட்கள் முகாம் நேற்று முன்தினம் துவங்கியது. நேற்று இரண்டாம் நாள் முகாம், பல்கலைக்கூட மணிமண்டபத்தில் நடந்தது.இதில், நுண்கலை துறை மாணவ, மாணவிகள் பங்கேற்று, இந்தியாவின் முக்கிய பாறை ஓவிய தளங்களில் காணப்படும், பொறிப்பு, செதுக்குதல், ஓவியங்களை கலைநயத்துடன், வரைந்தனர். மாணவர்கள் வரைந்தஒவியங்கள் மணி மண்டபத்தில், பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. வெளியில் இருந்து பார்வையிட வந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்களை அந்த ஒவியங்களை வெகுவாக கவர்ந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை