உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பாரில் கத்தியை காட்டி மிரட்டிய ரவுடி கைது

பாரில் கத்தியை காட்டி மிரட்டிய ரவுடி கைது

அரியாங்குப்பம்: பாரில் கத்தியை காட்டி மிரட்டிய பிரபல ரவுடியை போலீசார் கைது செய்தனர்.அரியாங்குப்பத்தை சேர்ந்தவர் சிவராஜ், 43; தனியார் நிறுவனத்தில் பணிபுரியம், இவர், அரியாங்குப்பம் - வீராம்பட்டினம் சாலையில் உள்ள தனியார் பாரில், நேற்று முன்தினம் மது குடித்து கொண்டிருந்தார்.அங்கு மது குடிக்க வந்த நபர், நான் பிரபல ரவுடி எனக் கூறி, கத்தியை காட்டி அங்கிருந்தவர்களை மிரட்டினார். இதுகுறித்து, பாரில் உள்ளவர்கள், அரியாங்குப்பம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.சப்இன்ஸ்பெக்டர் கதிரேசன் மற்றும் போலீசார் பாருக்கு சென்று, அந்த நபரை பிடித்து விசாரித்தனர். அவர், அரியாங்குப்பம் அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்த தேவதாஸ் மகன் ஜான்டேனியல் (எ) டேனியல், 27, என தெரியவந்தது.அவர் மீது, அரியாங்குப்பம் போலீஸ் ஸ்டேஷனில், கொலை வழக்கு, நெட்டப்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் கூட்டு கொள் ளையில் ஈடுபட்டது, உள்ளிட்ட வழக்குகள் உள்ளது. போலீசார் வழக்கு பதிந்து, அவரிடமிருந்து கத்தியை, பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட அவரை கோர்ட்டில், ஆஜர்ப்படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை