உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ஹெல்மெட் அணியாவிட்டால் ரூ.1,000 அபராதம்; சீனியர் எஸ்.பி.,

ஹெல்மெட் அணியாவிட்டால் ரூ.1,000 அபராதம்; சீனியர் எஸ்.பி.,

புதுச்சேரி: காராமணிக்குப்பம் ஜீவானந்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.பள்ளி துணை முதல்வர் ராமச்சந்திரன் வரவேற்றார். போக்குவரத்து சீனியர் எஸ்.பி., பிரவீன்குமார் திரிபாதி, எஸ்.பி., மோகன்குமார், இன்ஸ்பெக்டர் கோகுலக்கிருஷ்ணன் பங்கேற்று மாணவர்களுக்கு போக்குவரத்து விழிப்புணர்வு கருத்துக்களை கூறினர்.சீனியர் எஸ்.பி., பிரவீன்குமார் திரிபாதி பேசுகையில், 'போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும்,கடை பிடிக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே முழுமையாக செயல்படுத்த முடியும். ஹெல்மெட் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகள் பலர் விபத்தில் சிக்கி உயிரிழக்கின்றனர். உயிரிழப்புகளை தடுக்க ஹெல்மெட் அணிந்து செல்ல கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள் முதலில் ஹெல்மெட் அணிந்து வந்தால் தான் மாணவர்கள் அதனை பின்பற்றி நடப்பர். எனவே, ஆசிரியர்கள் அனைவரும் ஹெல்மெட் அணிந்து பள்ளிக்கு வாருங்கள்.ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டும் வாகன ஓட்டிகளுக்கு ரூ. 1,000 அபராதம் விதிக்கப்படும். இந்த அபராதம் விதிக்கும் நடைமுறை ஜனவரி முதல்தீவிரமாக கடைபிடிக்கப்படும்' என தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை