உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / 4 பேரிடம் ரூ. 1.7 லட்சம் அபேஸ்

4 பேரிடம் ரூ. 1.7 லட்சம் அபேஸ்

புதுச்சேரி, : புதுச்சேரியில், 4 பேரிடம் 1.7 லட்சம் ரூபாய் மோசடி செய்த கும்பலை, சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர்.வேல்ராம்பட்டு பகுதியை சேர்ந்த நபர் ஒருவரின் உறவினர் பெயரில் போலியாக, இன்ஸ்டாகிராம் ஐடியை, மர்ம நபர் ஒருவர் உருவாக்கினார். அதில், அவசர உதவிக்கு பணம் தேவை எனவும், வங்கி கணக்கு விபரங்களை குறுஞ்செய்தி மூலம் அனுப்பினார். அதை நம்பிய அவர், 20 ஆயிரத்து 300 ரூபாய் அனுப்பி ஏமாந்தார்.கதிர்காமத்தை சேர்ந்த பெண் ஒருவர், இணைதளத்தில் வந்த விளம்பரத்தின் மூலம் சமையல் எண்ணெய் வாங்க, 50 ஆயிரம் ரூபாய் அனுப்பி ஏமாந்தார். லாஸ்பேட்டையை சேர்ந்த நபர், லோன் ஆப் மூலம் கடன் பெற்று, அதனை அடைத்தார். இவரை தொடர்பு கொண்ட நபர், பணம் மேலும், கட்ட வேண்டும் இல்லை எனில், உனது புகைப்படத்தை மார்பிங் செய்து வெளியிடுவதாக மிரட்டினார். அதற்கு பயந்து அவர், 32 ஆயிரம் ரூபாயை அனுப்பி ஏமாந்தார். முத்தியால்பேட்டையை சேர்ந்த நபர், 5 ஆயிரத்து 300 அனுப்பி மர்ம நபரிடம் ஏமாந்தார்.இதுகுறித்து, 4 பேர் கொடுத்த புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து, மோசடி கும்பலை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை