உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / 3 பெண்களிடம்  ரூ.35.86 லட்சம் அபேஸ்

3 பெண்களிடம்  ரூ.35.86 லட்சம் அபேஸ்

புதுச்சேரி: கூடப்பாக்கம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை டெலிகிராம் மூலம் தொடர்பு கொண்ட நபர் வீட்டில் இருந்தபடி ஆன்லைன் வழியாக அதிகம் சம்பாதிக்கலாம் என, கூறினார். அதை நம்பிய அப்பெண், அந்த நபருக்கு பல்வேறு தவணைகளில் மொத்தம், 35.14 லட்சம் ரூபாயை அனுப்பி, ஏமாந்தார்.கரிக்கலாம்பாக்கம் பகுதி பெண் ஒருவரை தொடர்பு கொண்ட நபர், பங்கு சந்தையில் முதலீடு செய்தால், அதிக லாபம் கிடைக்கும் என்றார். அதனை நம்பி அவர், 60 ஆயிரம் ரூபாயை அனுப்பி ஏமாந்தார். புதுச்சேரியை சேர்ந்த பெண், பிரபல ஓட்டலில் தங்குவதற்கு முன்பதிவு செய்ய இணையதளத்தில் தேடியுள்ளார்.அதையடுத்து, 12 ஆயிரம் ரூபாயை அனுப்பி புக் செய்தார். அதன் பின், தான் போலியான இணைய தளத்தில் பதிவு செய்து, பணம் அனுப்பி ஏமாந்தது தெரிந்தது.புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து, மோசடி கும்பலை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை