உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வன்கொடுமையால் இறந்தவர் குடும்பத்திற்கு ரூ.4.42 லட்சம் நிதி

வன்கொடுமையால் இறந்தவர் குடும்பத்திற்கு ரூ.4.42 லட்சம் நிதி

புதுச்சேரி; வன்கொடுமை பாதிப்பில் இறந்த கடலுார் வாலிபர் குடும்பத்திற்கு, புதுச்சேரி ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் ரூ. 4.42 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது.கடலுார் அடுத்த வெள்ளப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து, 34: கூலி தொழிலாளி. இவர்,கடந்த மாதம் 8ம் தேதி, புதுச்சேரி பாகூர் அடுத்த குருவிநத்தம் சித்தேரி அணைக்கட்டு அருகில் உள்ள தனியார் மதுபான பாரில் மது குடித்து கொண்டிருந்தார். அப்போது, அங்கிருந்த மற்றொரு தரப்பிற்கும், முத்துவிற்கும் வாய் தகராறு ஏற்பட்டு தாக்கிக்கொண்டனர். இதில், படுகாயமடைந்த முத்து, ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி 9ம் தேதி உயிரிழந்தார்.முத்து, வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு இறந்ததால், அரசின் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில், வன் கொடுமையால் பாதிக்கப்பட்டோர் நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ், ரூ.4.42 லட்சம் நிதி உதவிக்கான காசோலையை முதல்வர் ரங்கசாமி, இறந்த முத்துவின் மனைவி விகிதாவிடம் நேற்று வழங்கினார்.நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சாய் சரவணன்குமார், பாஸ்கர் எம்.எல்.ஏ., துறை இயக்குநர் இளங்கோவன் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ