உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தொழிலாளி வீட்டில் ரூ. 50 ஆயிரம் திருட்டு

தொழிலாளி வீட்டில் ரூ. 50 ஆயிரம் திருட்டு

புதுச்சேரி: கூலி தொழிலாளி வீட்டில் 50 ஆயிரம் பணத்தை திருடிய நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.குருமாம்பேட், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குமுதா, 51; கூலி தொழிலாளி. இவர் தனது மகன் பார்த்திபன் பராமரிப்பில் இருந்து வருகிறார். குமுதா கூலி வேலைக்கு சென்று, சேமித்து வைத்திருந்த 50 ஆயிரம் பணத்தை வீட்டின் அலமாரியில் வைத்திருந்தார்.கடந்த 22ம் தேதி பார்த்தபோது, 50 ஆயிரத்தை காணவில்லை. அலமாரி முழுதும் தேடியும் கிடைக்காததால் யாரோ பணத்தை திருடியுள்ளது தெரியவந்தது.குமுதா அளித்த புகாரின் பேரில், மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை