ரூ.10 லட்சம் அபேஸ் ; சைபர் கிரைம் கும்பல் அட்டூழியம்
புதுச்சேரி; ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்து, மூலக்குளத்தை சேர்ந்த நபர் ரூ.10 லட்சம் மோசடி கும்பலிடம் இழந்துள்ளார். மூலக்குளத்தை சேர்ந்த நபரை தொடர்பு கொண்ட மர்ம நபர், ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்வது தொடர்பான, வாட்ஸ் ஆப் குரூப்பில் இணைத்துள்ளார். அதில், வர்த்தகத்தில் எவ்வாறு முதலீடு செய்வது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதை நம்பிய அவர், 10 லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ளார். அதன் மூலம் வந்த லாப பணத்தை எடுக்க முயன்றபோது, முடியவில்லை. இதேபோல், பகுதிநேர வேலையாக ஆன்லைனில் முதலீடு செய்த கதிர்காமத்தை சேர்ந்தவர் 99 ஆயிரத்து 800, குரும்பாபேட்யை சேர்ந்தவர் 93 ஆயிரத்து 300, பாகூரை சேர்ந்தவர் 33 ஆயிரம், சண்முகப்புரத்தை சேர்ந்தவர் 90 ஆயிரம், ஆரியப்பாளையத்தை சேர்ந்த பெண் 5 ஆயிரம் என, 6 பேர் 13 லட்சத்து 21 ஆயிரத்து 100 ரூபாய் ஏமாந்துள்ளனர். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.