ஆர்.எஸ்.எஸ்., சீருடை அணிவகுப்பு ஊர்வலம்
காரைக்கால் : காரைக்காலில் ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு சீருடை அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது. காரைக்கால் மாவட்டத்தில் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் சார்பில் ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் சீருடை அணிவகுப்பு ஊர்வலத்தை என்.ஐ.டி.,கழக இயக்குநர் மகரந்த் மாதவ் காங்ரேகர் துவக்கி வைத்தார். பேரணி பாரதியார் சாலை வழியாக,காமராஜர் சாலை வழியாக மதகடி கடல்கரைச்சாலையில் முடிவடைந்தது. பின்னர் நடந்த பொதுக்கூட்டத்திற்கு மயிலாடுதுறை ஆர்.எஸ்.எஸ்., மாவட்டத் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் மீனாட்சி சுந்தரம், அருள்முருகன், சிவசுப்ரமணியன், துரைசேனாதிபதி உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினர் கலந்து கொண்டனர். பேரணியை முன்னிட்டு பல்வேறு இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.