ரக்பி ரைசிங் போட்டி ஆல்பா பள்ளி சாதனை
புதுச்சேரி: ரக்பி ரைசிங் போட்டியில் முதலிடம் பிடித்து கோப்பை வென்ற ஆல்பா சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவிகள் கவுரவிக்கப்பட்டனர். இந்திய ரக்பி பெடரேஷன், புதுச்சேரி ரக்பி சங்கம் சார்பில், மாநில அளவிலான ரக்பி ரைசிங் போட்டி நடந்தது. இதில் 15 வயதிற்குட்பட்டோர் பிரிவில் ஆல்பா சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவிகள் பிரணிதா, ஜாஸ்வினி, தனிஷா, ஜோஷ்னா, விஷ்வஜனனி, இஷிதா, மதுனிகா, சப்தனா, தீக் ஷா, பவிஷ்கா, நித்தியஸ்ரீ ஆகியோர் முதலிடம் பெற்று சாதித்தனர். கோப்பை வென்ற மாணவிகளை ஆல்பா கல்விக் குழுமங்களின் இயக்குனர் தனதியாகு பாராட்டினார்.