உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மனைவி பிரிந்த சோகம் கணவர் தற்கொலை

மனைவி பிரிந்த சோகம் கணவர் தற்கொலை

புதுச்சேரி : பிரிந்து சென்ற மனைவி குடும்பம் நடத்த வராததால், விரக்தியில் கணவர் தற்கொலை செய்து கொண்டார்.வீராம்பட்டினத்தை சேர்ந்தவர் பிரவின்குமார், 28. இவர், வம்பாகீரப்பாளையம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். பாண்டி மெரினா கடற்கரையில், கடந்த 1 ஆண்டுக்கு முன், குதிரை ஓட்டி வந்தார். இவரது மனைவி பிரிந்து சென்ற நிலையில், குடும்பம் நடத்த அவரை அழைத்தார். ஆனால் அவர் வராததால், விரக்தியில் இருந்து வந்தார்.இந்நிலையில், வீராம்பட்டினம், ஈடன் கடற்கரை தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணி செய்த அவர், நேற்று முன்தினம் பணியை முடித்து விட்டு, வீட்டுக்கு சென்றவர், துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில், ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !