உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இரும்பை கோவிலில் குங்கும காப்பு பெருவிழா

இரும்பை கோவிலில் குங்கும காப்பு பெருவிழா

புதுச்சேரி:இரும்பை, பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவிலில், ஆடி பவுர்ணமியை முன்னிட்டு குங்கும காப்பு பெருவிழா இன்று நடக்கிறது. புதுச்சேரி - திண்டிவனம் பைபாஸ் சாலை, இரும்பை டோல்கேட் அருகே பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், ஆடி பவுர்ணமியை முன்னிட்டு குங்கும காப்பு பெருவிழா இன்று (8ம் தேதி) நடக்கிறது. இதையொட்டி, காலை 10:00 மணிக்கு பாலா திரிபுரசுந்தரி அம்பாளுக்கு சிறப்பு அபிேஷகம் நடக்கிறது. முக்கிய நிகழ்வாக, மாலை 6:30 மணிக்கு குங்கும காப்பு அலங்காரம், தீபாராதனையும், தொடர்ந்து, அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் தேர் உள்புறப்பாடு நடக்கிறது. இக்கோவிலில், ஆடி பவுர்ணமியில் மட்டுமே ஆண்டிற்கு ஒருமுறை அம்பாளுக்கு குங்குமக்காப்பு அலங்காரம் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. ஏற்பாடுகளை பாலா திரிபுரசுந்தரி அம்பாள் கோவில் டிரஸ்ட் செய்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை