மேலும் செய்திகள்
கஞ்சா வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது
50 minutes ago
ரகளை செய்த வாலிபர் கைது
56 minutes ago
புதுச்சேரி: அய்யங்குட்டிப்பாளையம், லட்சுமி நரசிம்மர் நகரில் அமைந்துள்ள சாய் கிருஷ்ணா கோவிலில் இன்று சாய்பாபா 100வது பிறந்த நாள் விழா நடக்கிறது. அதனையொட்டி, இன்று காலை 6:00 மணிக்கு ஓம்ஹாரம், சுப்ரபாதம், 6:15 மணிக்கு பல்லகிசேவா, 7:30 மணிக்கு அம்பாள் அபிேஷகம் மற்றும் வேத பாராயணம், 9:00 மணிக்கு சாய் சகஸ்கரநாமம், 10:00 மணிக்கு வஸ்தர தானம், 11:00 மணிக்கு மஹா நாராயணா சேவா நடக்கிறது. மாலை 3:00 மணிக்கு சாய்பாபாவின், வீடியோ காட்சி, 3:30 மணிக்கு வேதம் சாந்தி, 3:45 மணிக்கு இசை நிகழ்ச்சி, 4:45 மணிக்கு பால விகாஸின் பண்பாட்டு நிகழ்ச்சி, 5:45 மணிக்கு சாய் பஜன், 6:45 மணிக்கு சத்திய சாய்பாபா பிறந்த நாள் விழாவும், இரவு 7:45 மணிக்கு மஹா மங்கள ஆர்த்தி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை, புதுச்சேரி ஸ்ரீ சத்திய சாய் சேவா ஒருங்கிணைப்பு குழுவினர் செய்து வருகின்றனர்.
50 minutes ago
56 minutes ago