நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு
புதுச்சேரி : நகராட்சி, கொம்யூன், கிராம பஞ்சாயத்து ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்பட் டுள்ளது.புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அண்மையில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் உள்ளாட்சி துறையின் கீழ் நகராட்சி, கொம்யூன், கிராம பஞ்சாயத்துகளில் பணியாற்றும் முழு நேர தற்காலிக ஊழியர்களுக்கும் 01.07.2024 என முன்தேதியிட்டு ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.தினசரி 900 ரூபாய் பெறும் பியூன், சானிட்டரி ஒர்க்கர், அசிஸ்டண்ட், கேர்டேக்கர், வாட்ச்மேன், கேஷவல் லேபர், கேங்மேன், டேங்க் ஆபரேட்டர், பல் நோக்கு உதவியாளர் உள்ளிட்ட ஊழியர்களின் சம்பளம் 918ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல், தினசரி 995 ரூபாய் பெறும் கிளர்க், பில் கலெக்டர் கிரேடு-3 ஊழியர்களுக்கு 1015 ரூபாயும், 1275 ரூபாய் பெறும் ஸ்டெனோகிராபர்களுக்கு 1,301 ரூபாயும், 1460 ரூபாய் பெறும் டேட்டா ஆபரேட்டர் ஊழியர்களுக்கு 1,489 ரூபாய் சம்பளம் உயர்த்தப்பட் டுள்ளது.இதற்கான உத்தரவினை உள்ளாட்சி துறை சார்பு செயலர் ரத்னா பிறப்பித்துள்ளார்.