ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்
அரியாங்குப்பம்: முருங்கப்பாக்கம் சமரச சன்மார்க்க ராமானுஜ பஜனை மடம் மற்றும் ராம பக்த ஆஞ்சநேயர் கோவிலில் 20ம் ஆண்டு புரட்டாசி விழா நடந்தது.புரட்டாசி மாத சனிக் கிழமையையொட்டி, திருமால் கருட சேவையில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதனை தொடர்ந்து, ராம பக்த ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம், தொடர்ந்து, திருமால் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு திருமஞ்சனம் நடந்தது.சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மாலையில், திருமால் வீதியுலா நடந்தது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.