மேலும் செய்திகள்
பொங்கல் விழா
12-Jan-2025
புதுச்சேரி : புதுச்சேரி ரெட்டியார்பாளையம் மரியாள் நகர் 4வது பிரதான சாலை குடியிருப்போர் நல வாழ்வு சங்கம் சார்பில், சமத்துவ பொங்கல் மற்றும் தமிழர் திருநாள் விழா கொண்டாடப்பட்டது.விழாவில், பத்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு லெமன் ஸ்பூன் போட்டியும், 20 வயது கீழ் உள்ள ஆண்கள், பெண்களுக்கு பாட்டிலில் தண்ணீர் நிரப்புதல், ஸ்லோ சைக்கிள் போட்டி, பெரியவர்களுக்கு உரியடித்தல், மியூசிகல் சேர் போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டியில் 100க்கும் மேற்பட்டோர்கள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் மரியாள் நகர் நலவாழ்வு சங்க பிரதிநிதிகள் செய்திருந்தனர்.
12-Jan-2025