உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மணல் சிற்ப கண்காட்சி

மணல் சிற்ப கண்காட்சி

புதுச்சேரி : காந்தி ஜெயந்தி முன்னிட்டு, பா.ஜ., சார்பில் தலைமைச் செயலகம் எதிரே கடற்கரையில், ' விக்சித் பாரத் 2047' மணல் சிற்ப கண்காட்சி நடந்தது. கண்காட்சிக்கு, மாநிலத் தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் பார்வையிட்டார். இதில், சபாநாயகர் செல்வம், துணை சபாநாயகர் ராஜவேலு, தட்சிணாமூர்த்தி எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., வெங்கடேசன், மாநில செயலாளர்கள் புகழேந்தி, ஹேமாமாலினி, மூத்த நிர்வாகி இளங்கோவன், மாநில ஊடகத்துறை தலைவர் நாகேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மணல் சிற்பங்களை ராஜுகண்ணன், ராம்குமார், பலராமன், சுகுமார், தேவா ஆகியோர் வடிவமைத்தனர். ஏற்பாடுகளை மாநில கலாசார பிரிவு அமைப்பாளர் மணிகண்டன், ஜெய்கணேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை