உள்ளூர் செய்திகள்

 மணல் கடத்தல்

வில்லியனுார்: வில்லியனுார் போலீசார் நேற்று முன்தினம் இரவு பத்துக்கண்ணு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, டிப்பர் லாரியை ஓட்டி வந்தவர், போலீசாரை பார்த்ததும் லாரியை விட்டு விட்டு தப்பினார். சந்தேகமடைந்த போலீசார், டிப்பர் லாரியை சோதனை செய்த போது, செல்லிப்பட்டு ஆற்றில் இருந்து மணல் கடத்தி வந்தது தெரிந்தது. இதுதொடர்பாக, லாரி உரிமையாளர் வழுதாவூர் அடுத்த பக்கிரிபாளையம் தியாகராஜன், 30; என்பவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ