மேலும் செய்திகள்
சப்ளம்மா தேவி கோவில் திருவிழா பல்லக்கு ஊர்வலம்
04-Feb-2025
காரைக்கால் : காரைக்கால் மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்கா கந்துாரி விழாவில், சந்தனக்கூடு ஊர்வலம் நடந்தது.காரைக்காலில் மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் 202ம் ஆண்டு கந்துாரி விழா, கடந்த 8ம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்வான மின் அலங்கார சந்தன கூடு ஊர்வலம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. ரத பல்லக்கு, முக்கிய வீதிகள் வழியாக நேற்று அதிகாலை தர்காவை வந்தடைந்தது.ஊர்வலத்தில், கண்ணாடி பல்லக்கு, சாம்பிராணி சட்டி பல்லக்கு மற்றும் பல அலங்கார ஊர்திகள் அணிவகுத்து சென்றன. முன்னதாக, குதிரைகள் பூட்டிய சாரட் வாகனத்தில் மலர் போர்வை ஊர்வலமாக கொண்டுவந்து, மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் போர்த்தி, சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது. பின், சந்தனம் பூசும் வைபவம் நடந்தது. நிகழ்ச்சியில் அமைச்சர் திருமுருகன், எம்.எல்.ஏ.,க்கள் நாஜிம், நாகதியாகராஜன், சீனியர் எஸ்.பி.,லெட்சுமி சவுஜன்யா, மாநில ஹஜ் கமிட்டி தலைவர் இஸ்மாயில், முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன், காங்., முன்னாள் தலைவர் சுப்ரமணியன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
04-Feb-2025