மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
13 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
13 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
14 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
14 hour(s) ago
வில்லியனுார் : புதுச்சேரி உணவு கடத்தல் பிரிவு எஸ்.பி., தலைமையில் போலீசார் வில்லியனுார் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் திடீர் ஆய்வு செய்தனர்.புதுச்சேரி உணவு கடத்தல் பிரிவு எஸ்.பி., ரட்சனாசிங், இன்ஸ்பெக்டர் நியூட்டன், சப் இன்ஸ்பெக்டர் அகல்யா மற்றும் போலீசார் நேற்று மாலை வில்லியனுார் பைபாஸ் சாலையில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது பங்கில் இருந்து பாட்டிலில் பெட்ரோல் பிடித்து, அதன் தரம் குறித்து சோதனை மேற்கொண்டனர். அதனை தொடர்ந்து எஸ்.பி., ரட்சனாசிங் நிருபர்களிடம் கூறியதாவது: இது வழக்கமாக நடைபெறும் சோதனைதான். இதற்கு முன் காரைக்கால் ,மாகி, உள்ளிட்ட பகுதிகளில் சோதனை செய்துள்ளோம். அதன் அடிப்படையில் கடந்த ஆண்டு 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.இந்தாண்டு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் பெட்ரோல் பங்க் மட்டும் இல்லாமல் ஓட்டல், பார் உள்ளிட்ட இடங்களிலும் சோதனை செய்துவருகிறோம். பொதுமக்களுக்கு பெட்ரோல் பங்கில் அளவு குறைவாக பெட்ரோல் போட்டால் எங்களிடம் புகார் தெரிவிக்கலாம். பொது மக்கள் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
13 hour(s) ago
13 hour(s) ago
14 hour(s) ago
14 hour(s) ago