மேலும் செய்திகள்
அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி
23-Sep-2026
புதுச்சேரி: புதுச்சேரி கல்வே காலேஜ் அரசு மேல்நிலை பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி துணை முதல்வர் சித்ரா தலைமை தாங்கினார். விரிவுரையாளர் சிவகுமார் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக விக்னேஷ் கண்ணன் பங்கேற்று, கண்காட்சியினை துவக்கி வைத்து பார்வையிட்டார். கண்காட்சியில் நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை என மூன்று பிரிவுகளில் மாணவர்களின் 100க்கும் மேற்பட்ட படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன. பயிர் பாதுகாப்பு சாலை பாதுகாப்பு, சூரிய மின்சக்தி , ஸ்மார்ட் சிட்டி மற்றும் மருத்துவ குறிப்புகள் உட்பட பலவகை அறிவியல் படைப்புகள் பார்வையாளர்களை கவர்ந்தன. ஓய்வு பெற்ற விலங்கியல் விரிவுரையாளர் ரவிச்சந்திரன், முருங்கப்பாக்கம் தீரர் சத்தியமூர்த்தி அரசு மேல்நிலைப் பள்ளி இயற்பியல் விரிவுரையாளர் திருஞானசம்பந்தம் ஆகியோர் மாணவர்களின் சிறந்த படைப்புகளை தேர்வு செய்தனர். ஏற்பாடுகளை விரிவுரையாளர்கள் அருள் பிரகாஷ், அருள்மொழி, புஷ்பா, விஜயன், ஆசிரியர்கள் செந்தமிழ், செல்வி, புவனேஸ்வரி ஆகியோர் செய்திருந்தனர். தலைமையாசிரியர் உஷா நன்றி கூறினார்.
23-Sep-2026