உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / 1,330 திருக்குறளை ஒப்புவித்த பள்ளி மாணவிக்கு பாராட்டு

1,330 திருக்குறளை ஒப்புவித்த பள்ளி மாணவிக்கு பாராட்டு

காரைக்கால்: காரைக்கால் அரசு உயர்நிலைப் பள்ளியில் 1330 திருக்குறளையும் மனப்பாடமாக கூறிய மாணவிக்கு பரிசு வழங்கப்பட்டது.காரைக்கால் மாவட்டம், திருப்பட்டினம் அடுத்த விழிதியூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு பயிலும் மாணவி சாந்தினி, 1,330 திருக்குறளையும் மனப்பாடமாக கூறினார். அவருக்கு எம்.எல்.ஏ.,க்கள் நாஜிம், நாக தியாகராஜன் ஆகியோர் சல்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார்.நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அதிகாரி விஜயமோகனா, காரை பாரதி தமிழ் சங்க நிர்வாகிகள், பள்ளி ஆசிரியர்கள் மாணவியை வாழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை