உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  அரசு பெண்கள் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

 அரசு பெண்கள் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

புதுச்சேரி: முத்தியால்பேட்டை அரசு பெண்கள் நடுநிலைப் பள்ளியில், அறிவியல், கணிதம், கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் உணவுத் திருவிழா நடந்தது. கண்காட்சியை, வ.உ.சி பள்ளியின் விலங்கியல் விரிவுரையாளர் கந்தசாமி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து. மாணவிகளின் படைப்புகளை பார்வையிட்டு மதிப்பீடு வழங்கினார். கண்காட்சியில் 150 க்கும் மேற்பட்ட படைப்புகள் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தது. மேலும், இக்கண்காட்சியில், பயன்படாத பொருட்களிலிருந்து, பயனுள்ள 100க்கும் மேற்பட்ட கைவினைப் பொருட்கள் இடம் பெற்றிருந்தன. கண்காட்சியை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பார்வையிட்டனர். ஏற்பாடுகளை பள்ளி தலைமையாசிரியர் மரிய மார்ட்டின் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி