உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கீழுர் அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி

கீழுர் அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி

வில்லியனுார்: கீழுர் அரசு நடுநிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் ஜெயசெல்வி தலைமை தாங்கி, கண்காட்சி அரங்கை திறந்துவைத்து பார்வையிட்டார். கண்காட்சியில் மாணவர்களின் 100க்கும் மேற்பட்ட அறிவியல் படைப்புகள் இடம் பெற்றன. பண்டசோழநல்லுார் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் காந்திமதி மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் சிறந்த படைப்புகளை தேர்வு செய்து, முதல் மூன்று படைப்புகளுக்கு பரிசு வழங்கி பாராட்டினர். கண்காட்சி ஏற்பாடுகளை ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ