மேலும் செய்திகள்
அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி
29-Sep-2026
டிசி படம்: புதுச்சேரி: திருக்கனுார் அடுத்த கொடாத்துார் அரசு உயர்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் கணேசன் தலைமை தாங்கினார். மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன் துவக்கி வைத்தார். மாணவர்களின் 200க்கும் மேற்பட்ட அறிவியல் மாதிரி படைப்புகள் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டன. ஆசிரியர்கள் வள்ளி, கயல்விழி ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். ஆசிரியர்கள் சாந்தி, சோமசுந்தரம் ஆகியோர் நடுவர்களாக இருந்தனர். நிகழ்ச்சியில், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
29-Sep-2026