உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / முத்தியால்பேட்டை பள்ளியில் அறிவியல் கண்காட்சி

முத்தியால்பேட்டை பள்ளியில் அறிவியல் கண்காட்சி

புதுச்சேரி: புதுச்சேரி முத்தியால்பேட்டை சின்னாத்தா அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. கண்காட்சியை வையாபுரி மணிகண்டன் எம்.எல்.ஏ., குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். கண்காட்சியில் 300க்கும் மேற்பட்ட படைப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும், கணிதம், ஆங்கிலம், மொழி, ஓவியம், இசை, அழகு கலை, தையல் உள்ளிட்ட படைப்புகளும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் அர்பிதா தாஸ், தலைமை ஆசிரியை சாந்தி, அறிவியல் ஆசிரியர்கள் அன்னசுந்தரி, ஜெரால்டு லுாரியிஸ், திருச்செல்வம் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர். கண்காட்சியினை பள்ளி மாணவிகள், பெற்றோர்கள் பார்வையிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி