உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / திருக்கனுார் பள்ளியில் அறிவியல் கண்காட்சி 

திருக்கனுார் பள்ளியில் அறிவியல் கண்காட்சி 

திருக்கனுார்: திருக்கனுார் அரசு உயர்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. தலைமை ஆசிரியர் பூங்கோதை தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் ஜெர்லின் முன்னிலை வகித்தார். கூனிச்சம்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளி விரிவுரையாளர் விஜயகுமார் கண்காட்சியை திறந்து வைத்து, அறிவியல் படைப்புகளை பார்வையிட்டார். இதில், மாணவ, மாணவியரின் 150க்கும் மேற்பட்ட கலை மற்றும் அறிவியல் படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. அதில், மாணவர்களின் சிறந்த படைப்புகள் தேர்வு செய்யப்பட்டன. ஏற்பாடு களை ஆசிரியர் கள் மற்றும் அலுவலக ஊழி யர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை