அறிவியல் கண்காட்சி
திருக்கனுார் : சந்தை புதுக்குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளியில் இலவச சைக்கிள், ரெயின் கோட் வழங்கல் மற்றும் அறிவியல் கண்காட்சி நடந்தது.தலைமை ஆசிரியர் குமார் வரவேற்றார். முதன்மை கல்வி அதிகாரி மோகன் தலைமை தாங்கி, அறிவியல் கண்காட்சியை துவக்கி வைத்தார். மாணவ, மாணவியர்களுக்கு இலவச சைக்கிள், ரெயின் கோட் வழங்கினார்.அறிவியல் ஆசிரியர் சோமசுந்தரம் கண்காட்சியை ஒருங்கிணைத்தார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆசிரியர்கள் கணவா சையது, மகாலஷ்மி, அக்பர் ராஜ், கலைச்செல்வி, ராஜசேகர், கலையரசி, சுபாஷினி, அருண் பிரசாத், கெஜலட்சுமி செய்திருந்தனர்.