உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அறிவியல் கண்காட்சி

அறிவியல் கண்காட்சி

புதுச்சேரி : வாணரப்பேட்டை பகுதி, தாவிதுபேட்டை, காமராஜ் அரசு நடுநிலைப்பள்ளியில், மாணவர்களின் அறிவியல் கண்காட்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு, பொறுப்பாசிரியை வசுதா தலைமை தாங்கினார். ஆசிரியர் ஆனந்தராஜ் வரவேற்றார். இதில் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., நகராட்சி ஆணையர் கந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். நிறைவாக ஆசிரியை கனகலட்சுமி நன்றி கூறினார்.இதில் நகராட்சி டாக்டர் ஆர்த்தி, தொகுதி செயலாளர் சக்திவேல், கிளை செயலாளர்கள் சந்துரு, காளப்பன், இருதயராஜ், ராகேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். சிறந்த அறிவியல் படைப்புகளுக்கு, அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., பரிசு வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !