உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அறிவியல் கண்காட்சி

அறிவியல் கண்காட்சி

புதுச்சேரி: சாரம் எஸ்.ஆர்.சுப்ரமணியம் அரசு உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நேற்று நடந்தது.கண்காட்சியை கல்வித்துறை பெண் கல்வி இணை இயக்குனர் சிவராம ரெட்டி திறந்து வைத்து, பார்வையிட்டார். பள்ளியின் தலைமை ஆசிரியை அனிதா வரவேற்றார்.இதில், மாணவர்களின் 100க்கும் மேற்பட்ட அறிவியல் படைப்புகள் காட்சிப் படுத்தப்பட்டன. சிறந்த படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.ஏற்பாடுகளை அறிவியல் ஆசிரியர்கள் அனுராதா, மல்லிகா, லட்சுமி பிரியா, கீதா, காண்டீபன், ஜெயலட்சுமி மற்றும் ஆசிரியர் செய்திருந்தனர். உடற்கல்வி ஆசிரியர் சந்திரசேகரன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி