மேலும் செய்திகள்
திருபுவனை பள்ளியில் அறிவியல் கண்காட்சி
02-Oct-2024
புதுச்சேரி: வில்லியனுார் கணுவாப்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி மற்றும் வட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. தலைமை ஆசிரியர் திருவரசன் தலைமை தாங்கினார். முதன்மை கல்வி அலுவலர் மோகன் அறிவியல் கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார். விவேகானந்தா அரசுப் பள்ளி வேதியியல் விரிவுரையாளர் முரளி, கூடப்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி விலங்கியல் விரிவுரையாளர் இளங்கோ ஆகியோர் 'இன்றைய அறிவியல் முன்னேற்றத்தில் மாணவர்களின் பங்கு' குறித்து பேசினர்.தொடர்ந்து, வட்டார அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முன்னதாக கண்காட்சி பொறுப்பாளர் தணிகாசலம் வரவேற்றார். அறிவியல் ஆசிரியை திருமங்கை நோக்க உரையாற்றினார். கண்காட்சியில், பள்ளி மாணவ, மாணவிகளின் 100க்கும் மேற்பட்ட அறிவியல் படைப்புகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. அதில், அறிவியல் படைப்புகளில் இயற்கை பாதுகாத்தல், நீர் சேமித்தல், ஆற்றல் மூலங்கள், மாடித்தோட்டம், செயற்கை தொழில்நுட்பம், வானியல் படைப்புகள் போன்றவை இடம் பெற்றிருந்தன.ஆசிரியர் இளஞ்செழியன் நன்றி கூறினார்.
02-Oct-2024