உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரசு பெண்கள் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

அரசு பெண்கள் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

வில்லியனுார்: வில்லியனுார் அரசு பெண்கள் நடுநிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.கண்காட்சியை தலைமை ஆசிரியர் பஞ்சாத்தம்மா துவக்கி வைத்தார். அறிவியல் ஆசிரியர் சரவணன் நோக்க உரையாற்றினார். பள்ளி அறிவியல் ஆசிரியர்கள் வழிகாட்டுதலின்படி, மாணவர்கள் 170 அறிவியல் படைப்புகளை செய்திருந்தனர்.அதில் மழைநீர் சேமிப்பு, நீர் பாசனம், மின் சிக்கனம், ஓசோன் மண்டலம், சூரிய குடும்பம், மின் சேகரிப்பு, பூமி வெப்பமாதல் உள்ளிட்ட தலைப்புகளில் உருவாக்கப்பட்ட படைப்புகள் கண்காட்சியில் வைத்திருந்தனர். சிறந்த படைப்புகளை நடுவர்கள் குழு தேர்வு செய்து, மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆசிரியர்கள் சங்கராதேவி, முருகையன், அருணாதேவி, கனகா, கருணாகரன், விஜயலட்சுமி, பிரபாகரன், பிரேமா மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை