மேலும் செய்திகள்
அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி
13-Sep-2024
புதுச்சேரி: தவளக்குப்பம் அரசு மேல்நிலை பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது.கண்காட்சியினை பள்ளி துணை முதல்வர் பிரேமானந்தன் துவக்கி வைத்தார். கண்காட்சியினை ஏம்பலம் அரசு மேல்நிலைப் பள்ளி விரிவுரையாளர் ஜார்ஜ் பெர்னான்தாஸ், பாகூர் கஸ்துாரிபாய் அரசு மேல்நிலைப் பள்ளி விரிவுரையாளர் லோகேஸ்வரி ஆகியோர் திறந்து வைத்து மாணவர்களின் அறிவியல் படைப்புகளை பார்வையிட்டு சிறந்த படைப்புகளை தேர்வு செய்தனர். கண்காட்சியில், பள்ளியளவில் நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளி மாணவர்களின் 200க்கும் மேற்பட்ட அறிவியல் படைப்புகள் இடம்பெற்றன. அறிவியல் ஆசிரியர்கள் பருவதாசுந்தரி, கவுரி, ஜெசிந்தா, சுவேதா, கணித ஆசிரியை எழிலரசி, ஆருத்ரா, சாலமன், சுகுமார், விஜயலட்சுமி, தேவி, ஆண்டாள், எத்திராஜ், ஜஸ்டின் ஆகியோர் மேற்பார்வையில் அறிவியல் படைப்புகள் இடம்பெற்றன. ஏற்பாடுகளை பள்ளி பொறுப்பாசிரியர் திருநாராயணன், தலைமையாசிரியர் வெங்கடேஸ்வரி ஆகியோர் செய்திருந்தனர்.
13-Sep-2024