உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அறிவியல் கண்காட்சி

அறிவியல் கண்காட்சி

புதுச்சேரி: லாஸ்பேட்டை, நாவலர் நெடுஞ்செழியன் அரசு மேல்நிலைப் பள்ளியில் கலை, அறிவியல் கண்காட்சி நடந்தது. பள்ளி முதல்வர் அர்ப்பிதா தாஸ் தலைமை தாங்கினார். புதுச்சேரி அரிமா சங்க முன்னாள் தலைவர் சிவராமச்சந்திரன், அறிவியல் கண்காட்சியை துவக்கி வைத்து, பார்வையிட்டார். கண்காட்சியில், உயர்நிலை, மேல்நிலை பிரிவுகளில் மாணவர்கள் 100க்கும் மேற்பட்ட இலக்கியம், அறிவியல், வேளாண்மை, சுற்றுலா, வங்கி, ஓவியம், ஊட்டச்சத்து, பொருளாதாரம், உடற்கல்வி உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் கலை, அறிவியல் படைப்புகள் காட்சிப்படுத்தியிருந்தனர். ஒவ்வொரு பிரிவிலும் சிறந்த படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு, பரிசு வழங்கப்பட்டன. கண்காட்சியை பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பார்வையிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை