மேலும் செய்திகள்
சாரணர்களுக்கான பயிற்சி முகாம்
26-Feb-2025
புதுச்சேரி : திருக்கனுார் பிரைனி ப்ளும்ஸ் சர்வதேச சி.பி.எஸ்.சி., மேல்நிலைப் பள்ளியில் இரண்டு நாள் சாரணர் - சாரணியர் இயக்க மாணவர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது.அரவிந்த் கல்விக் குழுமத்தின் சேர்மன் வழக்கறிஞர் அருண்குமார், பள்ளி துணை தாளாளர் திவ்யா ஆகியோர் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினர். சாரண ஆசிரியர் முருகையன், மாணவர்களுக்கு கருத்துரை வழங்கினார். சாரண ஆசிரியர் விக்டோரியன், ராமு, சாரணர் இயக்கத்தின் குறிக்கோள் மற்றும் முடிச்சு வகைகள் குறித்து பயிற்சி அளித்தனர்.சாரண ஆசிரியர் மோகன்ராஜ், பச்சையப்பன் ஆகியோர் சாரண இயக்கத்தின் வரலாறு, முதலுதவி குறித்து பயிற்சி அளித்தனர். புதுச்சேரி சாரண சாரணியர் இயக்க மாநில அமைப்பு ஆணையர் சண்முகம், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.ஏற்பாடுகளை பள்ளி சாரண ஆசிரியர் கண்மணி, சாரணிய ஆசிரியை கண்ணியம்மாள். பாலச்சந்தர் செய்திருந்தனர்.
26-Feb-2025