உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / லாரி மோதி செக்யூரிட்டி பலி 

லாரி மோதி செக்யூரிட்டி பலி 

திருக்கனுார்: கூனிச்சம்பட்டில் பைக் மீது லாரி மோதிய விபத்தில் தனியார் நிறுவன செக்யூரிட்டி இறந்தார்.திருக்கனுார் அடுத்த தமிழகப் பகுதியான ஐவேலியை சேர்ந்தவர் நாராயணமூர்த்தி, 43; தனியார் நிறுவன செக்யூரிட்டி. இவரது மனைவி அம்பிகா. 2 மகள்கள் உள்ளனர்.இவர் நேற்று காலை வீட்டில் இருந்து தனது பைக்கில் (பி.ஓய் 05 ஆர் 3601) கூனிச்சம்பட்டு வழியாக வேலைக்கு சென்று கொண்டிருந்தார். கூனிச்சம்பட்டு கைக்கிலக்குட்டை சாலை வளைவில் வந்தபோது, எதிரே வந்த டிப்பர் லாரி (டி.என். 88 எல் 8221) பைக் மீது மோதியது. நாராயணமூர்த்தி ஹெல்மெட் அணிந்திருந்த நிலையிலும், படுகாயமடைந்தார்.இதையடுத்து, அருகில் இருந்தவர்கள் நாராயணமூர்த்தியை மீட்டு, மண்ணாடிப்பட்டு சமுதாய நலவழி மையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு, டாக்டர் பரிசோதனை செய்து, நாராயணமூர்த்தி இறந்து விட்டதாக தெரிவித்தார்.விபத்து குறித்து வில்லியனுார் போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டர் சந்திரகுமார் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து, விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவர் கோரைக்கேணி பாலாஜியை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை