மேலும் செய்திகள்
வீரத்தின் விளைநிலம் அஞ்சலையம்மாள்...
01-Nov-2024
புதுச்சேரி : இ.சி.ஆர். தனியார் திருமண நிலையத்தில் பணியில் இருந்த செக்யூரிட்டி கீழே விழுந்து இறந்தார். கடலுார், மதலப்பட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குமார், 55. இவர் புதுச்சேரி இ.சி.ஆரில் உள்ள தனியார் திருமண நிலையத்தில் செக்யூரிட்டியாக பணியாற்றி வந்தார். இவருக்கு, அஞ்சலை என்ற மனைவியும், இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் குமார், பணியின் போது கீழே விழுந்து தலையில் காயமடைந்தார். அருகிலிருந்தவர்கள் குமாரை மீட்டு, அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு, பரிசோதனை செய்த டாக்டர் குமார், இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து அஞ்சலை அளித்த புகாரின் பேரில், லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
01-Nov-2024