உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சீரா மீன் விலை திடீர் சரிவு

சீரா மீன் விலை திடீர் சரிவு

புதுச்சேரி: ஏனாம் பகுதியில் அரிதாக கிடைக்கும் சுவையான சீரா மீன், வரத்து அதிகம் காரணமாக விலை குறைந்தது. கோதாவரி ஆற்றின் உவர்நீர் கலந்த பகுதிகளில் வடகிழக்கு பருவமழை காலங்களில் சீரா மீன் அதிகளவில் கிடைப்பது வழக்கம். கடந்த சில நாட்களாக வரத்து குறைவாக இருந்ததால், ஒரு லிட்டர் சீரா மீன் ரூ.5 ஆயிரம் வரை விற்பனையானது. இந்நிலையில், நேற்று மதியம் ஏனாம் மீன் ஏல மையத்திற்கு சீரா மீன் அதிகளவில் கொண்டு வரப்பட்டதால், இதன் விலை கணிசமாக குறைந்து, ஒரு லிட்டர் சீரா மீன் ரூ.1,500 முதல் ரூ.2 ஆயிரம் வரை விற்பனையானது. ஒரு லிட்டர் ரூ.5 ஆயிரம் வரை விற்பனையான சீரா மீன், ஒரே நாளில் ரூ.1,500 வரை குறைந்ததால், மீன் பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதிகளவில் வரத்து கிடைத்ததால் மீனவர்களும், வியாபாரிகளும் உற்சாகமடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை