சுய உதவிக்குழு பெண் மீது தாக்குதல்
காரைக்கால்.மார்ச்.9 -: காரைக்காலில் மகளிர் சுய உதவி குழுவில் பணம் இல்லை எனக்கூறியதால் பெண்ணை தாக்கிவரை போலீசார் தேடிவருகின்றனர். காரைக்கால் நிரவி ஆற்றங்கரை தெருவை சேர்ந்த கலியமூர்த்தி. இவர் டிபன் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி அருள்மேரி, 39 ; மகளிர் சுய உதவி குழுவில் உறுப்பினராக உள்ளார். அதே பகுதியை சேர்ந்த தேன்மொழி , குழு தலைவியாக செயல்பட்டவர் தற்போது அந்த பொறுப்பிலிருந்து விலகிவிட்டார். இதைத்தொடர்ந்து அருள்மேரி, குழுவிற்கு பணம் வசூல் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த குமரேசன் மனைவி சுகுணாவு,குழுவில் பணம் கேட்டுள்ளார். குழுவில் பணம் இல்லை என்று தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சுகுணா கணவர் குமரேசன் நேற்று அருள்மேரியை ஆபாசமாக திட்டி தாக்கினார். இதில் காயமடைந்த அருள்மேரியை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். புகாரின் பேரில் நிரவி போலீசார் குமரேசன் மீது வழக்குப் பதிந்து அவரை தேடிவருகின்றனர்.