உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  குருவிநத்தம் அரசு பள்ளியில் கருத்தரங்கம் 

 குருவிநத்தம் அரசு பள்ளியில் கருத்தரங்கம் 

பாகூர்: குருவிநத்தம் பாரதிதாசன் அரசு உயர்நிலைப் பள்ளியில், பாதுகாப்பான இணைய பயன்பாடு என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. கருத்தரங்கிற்கு, பள்ளி தலைமையாசிரியர் குமார ராசு தலைமை தாங்கினார். தமிழாசிரியர் இரிசப்பன் வரவேற்றார். நல்லாசிரியர் வெற்றிவேல் 'இணைய வழிக் குற்றங்களும் தடுக்கும் வழிமுறைகளும்' குறித்து நோக்கவுரையாற்றினார். ட்ரஸ்ட் தொண்டு நிறுவனம் சார்பில், குழந்தை கள் மற்றும் இளைஞர்கள் தலைமைப் பண்புகள் குறித்து 7 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு கருத்தரங்கம் நடத்தப்பட்டது. இதில், தொண்டு நிறுவன ஆலோசகர் வைஷாலி, மனித வள மேலாண்மைப் பயிற்சியாளர் பூரணி, ஒருங்கிணைப்பாளர் ஐஸ்வர்யா ஆகியோர் கருத்துரையாற்றினார். கணிப்பொறி பயிற்று நர் பாலமுரளி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை