உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / எஸ்.ஐ.ஆர்., செயல்பாடுகள் கல்லுாரியில் கருத்தரங்கம்

எஸ்.ஐ.ஆர்., செயல்பாடுகள் கல்லுாரியில் கருத்தரங்கம்

புதுச்சேரி: மூலக்குளம் கிரைஸ்ட் பொறியியல் கல்லுாரியில் எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி செயல்பாடுகள் குறித்த கருத்தரங்கம் நடந்தது. மத்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகத்தின் ஒரு அங்கமான ‘மை பாரத்’ அமைப்பு சார்பில், எஸ்.ஐ.ஆர்., செயல்பாடுகள் குறித்த கருத்தரங்கம் மூலக்குளம் கிரைஸ்ட் பொறியியல் கல்லுாரியில் நடந்தது. நிகழ்ச்சிக்கு, சிறப்பு அழைப்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ., அசோக்பாபு கலந்து கொண்டு எஸ்.ஐ.ஆர்., செயல்பாடுகள் குறித்து விளக்கினார். எஸ்.ஐ.ஆர்., மூலமாக போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டு, தேர்தல் நேர்மையாக நடப்பதை சுட்டிக் காட்டி பேசினார். கருத்தரங்கில் நம் நாட்டின் ஜனநாயகத்தை பற்றியும், எஸ்.ஐ.ஆர்., செயல்பாடுகள், தேர்தல் நடைமுறைகள், ஓட்டுப் பதிவு, ஓட்டு எண்ணும் விதம், எஸ்.ஐ.ஆர்., எவ்வாறு செயல்படுகிறது குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை சுதர்ஷன், புகழேந்தி, ராஜூலு செய்திருந்தனர். கருத்தரங்கத்தில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !