மின்சார வாகனங்கள் பசுமையான எதிர்காலம் புதுச்சேரியில் கருத்தரங்கம்
புதுச்சேரி : புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக மின் மற்றும் மின்னணுவியல் துறை, இந்திய பொறியாளர்கள் கழகம், புதுச்சேரி மாநில நடுவம் சார்பில் மின்சார வாகனங்கள் - பசுமையான எதிர்காலம் நோக்கி என்ற தலைப்பில் கருத்தங்கம் நடந்தது. தொழில்நுட்ப பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த கருத்தரங்கை, பல்கலைக்கழக துணை வேந்தர் மோகன் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்து, உலக அளவில் அதிகரித்து வரும் மின்சார வாகனங்களின் பங்கு மற்றும் பசுமையான போக்குவரத்து தொழில்நுட்பத்தின் அவசியம் குறித்து எடுத்துரைத்தார். சென்னை, ஐ.ஐ.டி., மெட்ராஸ், துணை பேராசிரியர் தீபக் ரோனங்கி கலந்து கொண்டு, 'மின்சார வாகன சார்ஜிங் கட்டமைப்பு - மேலோட்டமும் போக்குகளும்' தலைப்பில் தொழில்நுட்பம் சம்மந்தமான முக்கிய கருத்துகளை தெரிவித்தார். பேராசிரியர் தமிழரசி, இந்திய பொறியாளர்கள் கழகம் தலைவர் சீனு திருஞானம், கவுரவத் தலைவர் சவுந்தரராஜன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். துறைத் தலைவர் இலன்சேரலாதன் 'மின்சார வாகனத்தில் இன்சுலேஷனின் பங்களிப்பு' குறித்தும், புதுச்சேரி டச் எனர்ஜி டெக்னாலஜி நிர்வாக அதிகாரி சண்முகானந்தம் 'பேட்டரி மற்றும் எரிசக்தி சேமிப்பு' குறித்தும் , சென்னை பவர் லேப் இன்ஸ்ட்ருமென்ட்ஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பொறியாளர் பாலமணிகண்டன் 'மின்சார வாகனங்களின் தொழில்நுட்ப மூளைச் சிந்தனை' குறித்தும் பேசினர். கருத்தரங்கில் பங்கேற்ற மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இளநிலை, முதுநிலை, ஆராய்ச்சி மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் கலந்து கொண்டனர்.