மேலும் செய்திகள்
பிராமணர் நலச்சங்கத்தின் உறுப்பினர் பொதுக்குழு
24-Dec-2024
புதுச்சேரி: புதுச்சேரி மூத்த குடிமக்கள் நலவாழ்வு சங்கத்தின் 26வது ஆண்டு விழா நடந்தது.லாஸ்பேட்டை தனியார் பள்ளியில் நடந்த விழாவில், சங்க தலைவர் தேவநாதன் வரவேற்றார். ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்திரன் தலைமை தாங்கினார். வைத்தியநாதன் எம்.எல்.ஏ., வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினர்களாக அமைச்சர் லட்சுமிநாராயணன், செல்வகணபதி எம்.பி., ஆகியோர் பங்கேற்று, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற, மூத்த குடிமக்களின் பேரக்குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கினர். தொடர்ந்து, புதியதாக சேர்க்கப்பட்ட உறுப்பினர்களுக்கு அடையாள அட்டையும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், புதிய தலைவராக வேணுகோபால் மற்றும் சங்க நிர்வாகிகள், செயற்க்குழு உறுப்பினர்கள் பதவியேற்று கொண்டனர்.
24-Dec-2024