கொத்தபுரிநத்தம் கோவிலில் செடல் திருவிழா
திருபுவனை: கொத்தபுரிநத்தம் முத்து மாரியம்மன் கோவில் செடல் திருவிழா மற்றும் தேரோட்டம் நடைபெற்றது.திருவாண்டார்கோயில் அடுத்த கொத்தபுரிநத்தம் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஐந்தாம் நாள் முத்துப்பல்லக்கு உற்சவம் நடந்தது. கடந்த 9ம் தேதி செடல் திருவிழா மற்றும் தேரோட்டம் நடந்தது.அன்று இரவு கழுமரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது. அதில் 70 அடி உயரமுள்ள கழுமரத்தில் காப்பு கட்டிய பக்தர்கள் ஏறி அமர்ந்தனர். பின்னர் கூடையில் வரும் மோரை அருந்திய பிறகு அங்கிருந்து எலுமிச்சை பழத்தினை பக்தர்களுக்கு வீசி எறிந்தனர். இரவு சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்து, ஆரியமாலா, கருப்பழகி, காத்தவராயன் சுவாமி திருக்கல்யாணம் நடந்தது.