உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ரகளையில் ஈடுபட்ட ஏழு பேர் கைது

ரகளையில் ஈடுபட்ட ஏழு பேர் கைது

புதுச்சேரி: இருவேறு பொது இடத்தில் ரகளையில் ஈடுபட்ட 7 பேரை போலீசர் கைது செய்தனர்.மேட்டுப்பாளையம் சாலையில், பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் சிலர் ரகளையில் ஈடுபட்டு வருவதாக மேட்டுப்பாளையம் போலீசாருக்கு தகவல் வந்தது. அதையடுத்து, நேற்று சப் இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரகளை செய்த முத்திரையர்பாளையத்தை சேர்ந்த சந்திரன், 36; என்பவரை கைது செய்தனர்.அதே போல, ரெட்டியார்பாளையத்தில், ரகளை யில் ஈடுபட்ட, பூமியான்பேட்டையை சேர்ந்த முருகன், 29; சிதம்பரம் அடுத்த காட்டுமன்னார் கோவிலை சேர்ந்த கலையழகன், 27; புதுச்சேரியை சேர்ந்த ஜெகன், 22; சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த வெங்கடேசன், 46; நெல்லித்தோப்பை சேர்ந்த அரவிந்த், 29, ஹரி, 28; ஆகிய 6 பேரை ரெட்டியார்பாளையம் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ